சீனாவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பலி

#China #Death #Accident #people #fire #Building
Prasu
1 month ago
சீனாவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பலி

சீனாவின் கிழக்கில் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 

தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். 

ஆனால் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர். இந்த தீ விபத்தில் 15 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர். 

தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது.