குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சை பிரிவை மூட நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சை பிரிவை மூட நடவடிக்கை!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பல சிறுநீரக நோயாளர்கள் உயிரிழந்ததைக் கருத்தில் கொண்டு நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அந்த பிரிவில் இருந்து டயாலிசிஸ் செய்துகொண்ட 05 சிறுநீரக நோயாளர்கள் சுமார் ஒரு மாத காலப்பகுதிக்குள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாக்டீரியா தொற்று அல்லது டயாலிசிஸுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அல்லது உபகரணங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த நிலை ஏற்பட்டதா என்பதை கண்டறிய வைத்தியசாலை மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், குறிப்பிட்ட காரணத்தை கண்டறிய முடியவில்லை என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.  

இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான குழுவொன்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.  

குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நோயாளர்களை மீளப்பெறும் வரை ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!