இலங்கையின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி இரத்தினபுரி மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளில் காற்றின் அளவு குறைந்துள்ளமையால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரியில் வெப்பநிலையானது 36 பாகை செல்சியஸ் ஆகவும், கண்டியில் 30 பாகை செல்சியஸாகவும், நுவரெலியாவில் 21 பாகை செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
காற்று குறையும் போது வளிமண்டலம் குளிர்ச்சியான நிலையை அடையாது. அதனால்தான் வெப்பநிலை அதிகரித்துள்ளது. ஆண்டின் இக்காலப்பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பது வழமையான ஒன்றாகும்.



