மோட்டார் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!
#SriLanka
#Accident
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கலென்பிந்துனுவெவ - கதலாவ பிமேரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதியும், பின் இருக்கையில் பயணித்தவரும் சிகிச்சைக்காக கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ராஜாங்கனை தெற்கு கரையை சேர்ந்த 19 வயதுடையவர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



