இலங்கையில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
#SriLanka
#School
#education
#School Student
Mayoorikka
1 year ago

நாட்டில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் 3 வீதமானவர்கள் அல்லது சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை நிறுத்தியுள்ளதாக அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இலங்கையில் எடைக்குறைவான குழந்தைகளின் வீதம் மேலும் அதிகரித்துள்ளதாகவும், இது 2022 ஆம் ஆண்டில் 19.5 வீதமாகவும், 2023 ஆம் ஆண்டில் 21 வீதமாகவும் காணப்படுவதாக சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள சுகாதார மற்றும் போஷாக்கு பணியகம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



