பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய ஆணைக்குழுவை உருவாக்க நடவடிக்கை!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழு என்ற புதிய நிறுவனத்தை விரைவாக செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் புதிய ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி, இந்த நாட்டில் பல்கலைக்கழக அமைப்பின் ஊடாக ஆக்கப்பூர்வமான பட்டதாரிகளை உருவாக்க முடியாத நிலை காணப்படுகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.



