யாழ் பல்கலைக்கழக மாணவரின் மரணத்தில் புதிய திருப்பம்!

#SriLanka #Jaffna #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ் பல்கலைக்கழக மாணவரின் மரணத்தில் புதிய திருப்பம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடம் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இளைஞர் வீடொன்றில் தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி வரும்போதே, யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.  

குறித்த மாணவர் செலுத்திய மோட்டார் வண்டியில் கிரிக்கெட் மட்டை இருந்ததும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவன் உட்பட சிலர் அதிகாலை 2.58 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 4 மணியளவில், வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைக்க முயன்று விட்டு திரும்பி வரும் போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசாரால் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4