வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டிய கும்ப ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டிய கும்ப ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். மற்றவர் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பரணி: தாய்வழி உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். கார்த்திகை 1: பணியிடத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். உங்கள் செயலில் விவேகம் இருக்கும்

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: துணிவுடன் செயல்படுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். ரோகிணி: வரவேண்டிய பணம் வீடுதேடி வரும். நீண்ட நாள் பிரச்னையில் முடிவு தோன்றும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும். புதியபொருள் சேரும். திருவாதிரை: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புனர்பூசம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கவனக்குறைவால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். பூசம்: உங்களையும் அறியாமல் தடுமாற்றத்திற்கு ஆளாவீர்கள். செயல்களில் விழிப்புணர்வு தேவை. ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை எட்ட முடியாமல் போகும்.

சிம்மம்

மகம்: பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. புதிய முயற்சிகளும், வேறு சிந்தனையும் இன்று வேண்டாம். பூரம்: விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்க்க முடியும். குடும்பத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். உத்திரம் 1: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வந்துசேரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். அஸ்தம்: கடனாக கொடுத்த பணம் வந்துசேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். சித்திரை 1,2: சிந்தித்து செயல்படுவீர்கள். முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.

துலாம்

சித்திரை 3,4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். பழைய பிரச்னை தீரும். சுவாதி: நண்பர்கள் வழியே வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3: உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். மற்றவருடன் அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர்கள்.

விருச்சிகம்: 

விசாகம் 4: நீங்கள் மேற்கொள்ளும் செயலில் ஆதாயம் காண்பீர்கள். பகைவர்கள் விலகிச் செல்வார்கள். அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். கேட்டை: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.

தனுசு

மூலம்: நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். பூராடம்: உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் காணாமல் போவார்கள். கவனமுடன் செயல்படுங்கள். உத்திராடம் 1: வியாபாரத்தில் போட்டியாளர்களால் பிரச்னைகள் தோன்றும். அமைதி காப்பது நல்லது.

மகரம்:

உத்திராடம் 2,3,4: நண்பர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். திருவோணம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த முயற்சி லாபமாகும். குடும்பத்தினர் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உங்கள் செல்வாக்கு உயரும். சதயம்: போட்டியாளர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். பூரட்டாதி 1,2,3: தொழிலில் உண்டான தடைகள் விலகும். மற்றவரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.

மீனம்

பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உத்திரட்டாதி: வியாபாரத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபம் தரும். ரேவதி: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.