கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு இன்று நீதிமன்றில்!
#SriLanka
#Mullaitivu
#Court
Mayoorikka
9 months ago
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற இருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் ஆரம்பிப்பது குறித்தே இன்றையதினம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதும் குறிப்பிடதக்கது.