யாழ் - கட்டைக்காடு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான கூடாரம்!

#SriLanka #Jaffna #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ் - கட்டைக்காடு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான கூடாரம்!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று (22.02)  கரையொதுங்கியுள்ளது.  

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர்.  

இரும்பால் ஆன குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவர முயன்ற நிலையில், அவ் முயற்சி தோல்வியுற்றதால்,  கூடாரத்தை அகற்றும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். 

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டிருந்தது. 

இருப்பினும் கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் , காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4