பண முயற்சி இழுபறியாகி , பொருளாதார நெருக்கடியால் சங்கடப்படும் சிம்ம ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
8 months ago
பண முயற்சி இழுபறியாகி , பொருளாதார நெருக்கடியால் சங்கடப்படும் சிம்ம ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். பரணி: உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ரோகிணி: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு புரிவார்கள். மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய முயற்சி லாபமாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புனர்பூசம் 1,2,3: பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. பிறரிடம் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

கடகம்

புனர்பூசம் 4: எந்த ஒன்றிலும் அவசரம், ஆவேசம் வேண்டாம். அமைதியாக செயல்படுங்கள். பூசம்: செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆயில்யம்: முயற்சியில் தடைகள் ஏற்படும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் நன்மை அடைவீர்கள்.

சிம்மம்

மகம்: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பண வரவிற்காக மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பூரம்: குடும்பத்தினரால் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். பணியிடத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உத்திரம் 1: வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடப்படுவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த பணம் வந்துசேரும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட செயல் நிறைவேறும். அஸ்தம்: லாப சந்திரனால் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். கடன்களை அடைப்பீர்கள். சித்திரை 1,2: வியாபார அபிவிருத்திக்காக புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சுவாதி: பணியிடத்தில் இருந்த பிரச்னை விலகும் என்றாலும் மற்றவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நண்பர்கள் ஆதரவால் நன்மை ஏற்படும். கேட்டை: பெரியோர் ஆதரவுடன் பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடம் விலகும்.

தனுசு

மூலம்: முயற்சி இழுபறியாகும். செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பூராடம்: வியாபார போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உத்திராடம் 1: உங்கள் முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். திருவோணம்: நண்பர்கள் வழியே நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சதயம்: கவனமுடன் செயல்படுவதால் உங்கள் முயற்சி லாபமாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.

மீனம்

பூரட்டாதி 4: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். உத்திரட்டாதி: பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். ரேவதி: இழுபறியாக இருந்த பிரச்னை தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!