பாரிஸில் ஈபிள் கோபுர ஊழியர்கள் போராட்டம்
#France
#Protest
#Employees
#Salary
#EiffelTower
#Paris
Prasu
8 months ago
பாரிஸில் ஈபிஃள் கோபுரத்தை மூடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் செய்பவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரான CGT தொழிற்சங்கத்தைச் சேர்ந்த டெனிஸ் வவசோரி தொழிலாளர்களின் போராட்டம் பல நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்றவாறு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் 135 ஆண்டுகள் பழமையான கோபுரத்தின் பராமரிப்பை மேம்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள்,
அதன் சில இரும்பு வேலைகளில் துருப்பிடித்த தடயங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்