சிம்ம ராசியினருக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிந்து லாபம் அதிகரிக்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
சிம்ம ராசியினருக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிந்து லாபம் அதிகரிக்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். பரணி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். கார்த்திகை 1: உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும், அரசு வழி முயற்சியில் லாபம் தோன்றும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பாராத செலவு தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். செலவில் கவனம் தேவை. ரோகிணி: வருமானம் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் பொருளாதார நெருக்கடி உண்டாகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும், வாழ்க்கைத் துணையினால் பிரச்னை முடிவிற்கு வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தடைபட்ட வேலையை தொடருவீர்கள். திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். முதலீட்டில் இருந்து பணம் வரும். புனர்பூசம் 1,2,3: விலகிச் சென்றவர் மீண்டும் தேடி வருவார். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி எண்ணத்தை நிறைவேற்றுவீர். பூசம்: தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர். ஆயில்யம்: பூர்வீக சொத்துப் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

சிம்மம்

மகம்: இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். பூரம்: தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். முயற்சியில் அக்கறை கொள்வது அவசியம். அஸ்தம்: உங்கள் செயல்களில் தாமதம் ஏற்படும். அடுத்தவர் விஷயங்களில் இன்று தலையிட வேண்டாம். சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சட்டத்திற்கு புறம்பான விவகாரம் வேண்டாம்.

துலாம்

சித்திரை 3,4: ஏழாமிட சந்திரனால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். விசாகம் 1,2,3: இதுவரை இருந்த தடை விலகும். நண்பர்கள் ஆதரவால் புதிய முயற்சி லாபம் தரும்.

விருச்சிகம்

விசாகம் 4: தடைகளை விலக்கி வைத்து புதிய பாதையில் பயணம் செய்வீர். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். எதிர்ப்பு விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். கேட்டை: மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நிதானம் தேவை.

தனுசு

மூலம்: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர். பிள்ளைகள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பர் பூராடம்: குழப்பம் விலகி தெளிவடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்ததை அடைவீர். உத்திராடம் 1: குடும்பத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். திருவோணம்: புதிய முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நட்பு வட்டம் விரியும். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த ஒருவரை இன்று சந்தித்து மகிழ்வீர். குடும்பக்குழப்பம் மறையும். எண்ணம் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: துணிச்சலாக செயல்படுவீர். நேற்று முடிவிற்கு வராமல் இருந்த ஒரு பிரச்னை முடியும். சதயம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர். போட்டியாளர் விலகிச்செல்வர். பூரட்டாதி 1,2,3: சகோதரர் உதவியுடன் செயல்களில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த வரவு தேடி வரும்.

மீனம்

பூரட்டாதி 4: ஆதாயம் அதிகரிக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். உத்திரட்டாதி: விட்டுக் கொடுத்து செயல்படுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ரேவதி: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். ஒருசிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.