நெருக்கடி இருந்தாலும் போராடி வெற்றிபெறும் மீன ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
நெருக்கடி இருந்தாலும் போராடி வெற்றிபெறும் மீன ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி : இன்று மாலை வரை அலைச்சலும் சங்கடங்களும் நீடிக்கும் அதன்பின் நிலைமை சீராகும். பரணி: புதிய முயற்சி இன்று இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. கார்த்திகை 1: செலவு பல வழியிலும் அதிகரிக்கும். பண நெருக்கடி ஏற்படும். மனதிற்குள் குழப்பம் தோன்றும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். ரோகிணி: வியாபாரத்தை விரிவு செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் செயல் வெற்றியாகும். மிருகசீரிடம் 1,2: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசு வழி முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். திருவாதிரை: தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். பூசம்: வருவாயை எதிர்பார்த்து நீங்கள் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். உங்கள் செயல் லாபத்தில் முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும். பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. உத்திரம் 1: இன்று மாலை வரை வரவு செலவில் இருந்த நெருக்கடி உண்டாகும். பணியிட பிரச்னை தோன்றும்.

கன்னி

உத்திரம் 2,3,4: மாலை வரை உங்கள் முயற்சி வெற்றியாகும். அதன்பின் எதிர்பாராத சங்கடம் தோன்றும். அஸ்தம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். சித்திரை 1,2: உங்கள் முயற்சி நிறைவேறும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.

துலாம்

சித்திரை 3,4: தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலையில் பாதிப்பு விலகும். சுவாதி: நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். விசாகம் 1,2,3: செயலில் இருந்த தடை நீங்கும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவர். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: பெரியோர் ஆதரவுடன் இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். கேட்டை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதில் நிறைவேறும். உறவினர்களுக்கு உதவிகள் புரிவீர்கள்.

தனுசு

மூலம்: உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூராடம்: நண்பர் ஆதரவால் எண்ணம் ஈடேறும். வருமானத்தில் இருந்த தடை விலகும். பணிபுரியும் திறமை வெளிப்படும். உத்திராடம் 1: திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர். புதிய முயற்சியை இன்று ஒத்தி வைப்பது நல்லது.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரம் விருத்தியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர். திருவோணம்: மறைமுக எதிர்ப்பை முறியடித்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர். அவிட்டம் 1,2: வரவேண்டிய பழைய பாக்கி வந்து சேரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரி எண்ணம் நிறைவேறும். ஒரு சிலர் பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். சதயம்: உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: குடும்ப நலன் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பண வரவு அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். உத்திரட்டாதி: செயல்களில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். உத்தியோகத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். இன்று மாலை வரை சில நெருக்கடி இருந்தாலும் போராடி வெற்றிபெறுவீர்.