மிதுன ராசியினருக்கு தொழில் துறையில் நன்மை அதிகரிக்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
மிதுன ராசியினருக்கு தொழில் துறையில் நன்மை அதிகரிக்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சி பலிக்கும். வரவு அதிகரிக்கும். அதன்பின் செயல்களில் சங்கடம் உண்டாகும். பரணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் காலையில் வரும். மதியத்திற்கு மேல் வேலையில் அலைச்சல் அதிகரிக்கும். கார்த்திகை 1: உங்கள் செயல் வெற்றியாகும். பொருளாதார நிலை சீராகும். நண்பர்கள் உதவியால் சங்கடம் நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் அதிகரிக்கும். ரோகிணி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். மிருகசீரிடம் 1, 2: விலகிச் சென்றவர் மீண்டும் உதவி கேட்டு வருவர். கோயிலுக்கு சென்று வருவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டிருந்த செயல்களை செய்து முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். தொழிலில் லாபம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்து சேர்வர். தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: நேற்றைய சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நிதிநிலை உயரும். பூசம்: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம்: மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

சிம்மம்

மகம்: மதியம் வரை உங்கள் செயல் லாபமாகும். நெருக்கடி அதிகரிக்கும். விழிப்புணர்வு அவசியம். பூரம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்திரம் 1: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உடல் நிலையில் உண்டான பாதிப்பு விலகும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும். அஸ்தம்: வியாபாரத்தில் உண்டான சங்கடம் நீங்கும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: ஆரோக்கியம் சீராகும். எதிரிகளின் தொல்லை விலகும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.

துலாம்

சித்திரை 3,4: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விசாகம் 1,2,3: சொத்துப் பிரச்னையை பேசித்தீர்வு காண்பீர். உங்கள் முயற்சிக்கு உதவியாக நண்பர்கள் இருப்பார்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். அனுஷம்: டென்ஷன் அதிகரிக்கும். வேலைபளு கூடும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். உங்களுடன் பணிபுரிபவர்களிடம் வீண் விவாதம் வேண்டாம்.

தனுசு

மூலம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். பூராடம்: உங்கள் செயலில் இருந்த தடை விலகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: காலையில் சில சங்கடம் சந்தித்தாலும் மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி வெற்றியாகும். திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். வருவாயில் இருந்த தடை நீங்கும். உங்கள் செயல் எளிதாக நிறைவேறும். அவிட்டம் 1,2: பணத்தேவை நிறைவேறும், முயற்சியில் இருந்த தடை விலகும். பழைய கடன்களை அடைப்பீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: மதியம்வரை மனதில் குழப்பம் இருக்கும். முயற்சிக்கேற்ற பலன் இல்லை என்ற எண்ணம் மேலோங்கும். சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் வரவு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: காலையில் ஏற்பட்ட நெருக்கடி மதியத்திற்கு மேல் குறையும். எதிர்பார்த்த வரவால் சங்கடம் நீங்கும்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும், மதியத்திற்கு மேல் நிலை மாறும். விருப்பம் நிறைவேறும். உத்திரட்டாதி: உங்கள் செயல் லாபமாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ரேவதி: வியாபாரத்தில் உண்டான நெருக்கடி தீரும். மதியத்திற்குமேல் நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும்.