கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர்

#India #Death #School #Murder #Teacher #Karnataka
Prasu
2 years ago
கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர்

தும்கூர் மாவட்டம், குனிகல் தாலுகாவில் ஆசிரியர் ஒருவர் இன்று கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம், தும்கூர் மாவட்டம், குனிகல் தாலுகா குல்லி நஞ்சய்யன்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியப்பா(47). இவர் மோதூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

வீட்டில் இருந்து பள்ளிக்குக் கிளம்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், குல்லி நஞ்சய்யன்பாளையத்தில் பண்ணையில் மாரியப்பாவின் உடல் வெட்டுக் காயங்களுடன் கிடந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குனிகல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

அப்போது மாரியப்பாவின் தலை மற்றும் தோள்பட்டையில் பல முறை ஆயுதங்களால் வெட்டப்பட்டிருந்த காயங்கள் இருந்தன. அத்துடன் ஓட ஓட விரட்டி அவர் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

 தனிப்பட்ட விரோதத்தின் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து குனிகல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4