மியான்மர் செல்லும் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு

#India #Tourist #government #Myanmar #Visit #Indian
Prasu
2 years ago
மியான்மர் செல்லும் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு

மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமை பின்னடைவை சந்தித்து வருவதால் மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு சூழல் மிகவும் மோசமடைந்து வருவதாலும், தொலைபேசி மற்றும் தொடர்புகளில் ஏற்பட்டுள்ள தடைகள், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளைக் கருத்திகொண்டு இந்தியர்கள் யாரும் மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்கு செல்ல வேண்டாம்.

ஏற்கெனவே ரக்கைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி முதலாம் திகதி மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரி அங்கு பரவலாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

ரக்கைன் மாநிலம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஆயுதம் தாங்கிய போராளி குழுக்களுக்கும் மியான்மர் இராணுவத்துக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.

 இரண்டு தரப்புகளுக்கும் இடையேயான மோதல் கடந்த நவம்பர் மாதம் முதல் தீவிரமடைந்து வந்ததைத் தொடர்ந்து மியான்மரின் முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4