நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

#India #Tamil Nadu #Congratulations #Vijay #parties
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

இன்று சென்னையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார்.

இதைதொடர்ந்தது பல்வேறு தலைவர்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் விஜய்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன் என்று விஜய் தெரிவித்தார்.

images/content-image/1706879634.jpg

 இந்நிலையில் அமைச்சர் உதயநிதி புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமையுள்ளது. விஐய்யின் மக்கள் பணி சிறக்ககட்டும் என்றும் புதிய கட்சியை தொடங்கியதற்கு எனது பாராட்டு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு” எனப் பதிலளித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4