கங்குவா படத்தின் பாபிதியோலின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

#Cinema #TamilCinema #Lanka4 #release #lanka4Media #lanka4_news #lanka4.com #poster
Mugunthan Mugunthan
2 months ago
கங்குவா படத்தின் பாபிதியோலின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

‘கங்குவா’ படத்தில் நடித்துள்ள நடிகர் பாபிதியோலின் தோற்றம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’.

இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். 

வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னால் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாபி தியோலின் போஸ்டர் அவர் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.