மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியை தாக்கிய நபரை அம்பலப்படுத்திய சாணக்கியன்!

#SriLanka #Colombo #Attack #Prison #Lanka4 #sanakkiyan #prisoner
Mayoorikka
1 year ago
மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியை தாக்கிய நபரை அம்பலப்படுத்திய சாணக்கியன்!

கைதியை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 இன்றைய தினம் கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைத்துள்ள கைதிகளை நேரடியாக சந்தித்திருந்தேன். 

இவ் திடீர் சந்திப்புக்கான காரணம் சுமார் பத்து நாட்களுக்கு முன் பிரதீபன் என்பவரை வெளியில் இருந்து வந்த சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் என்று கூறப்படுபவர்கள் தாக்கியிருந்தார். 

 அவரது நலனை விசாரிக்கும் நோக்கில் சென்றிருந்தேன். முக்கியமாக வெளியில் இருந்து வந்து அத் தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நீதி மற்றும் சிறைச்சாலைகளுக்கான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்பவருக்கும் அறிவித்தேன். கைதியை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது. ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அரசியல் கைதிகள் கற்பளித்தோ, கொள்ளை அடித்தோ அல்லது போதைப்பொருள் கடத்தியோ சிறைக்கு வந்தவர்கள் அல்ல. 

 ஆனால் இவற்றை செய்தவர்கள் வெளியில் சில அரசியல் தலைவர்களாகவும், குறிப்பாக ஓட்டுக்குழுக்களை சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் கூட உள்ளார்கள். நாம் அவர்களையும் இவர்களையும் ஒப்பிட முடியாது. இவர்களின் பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்.

 இவ் சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் மிகவும் கவனமான முறையில் தங்களை நடாத்துவதாகவும், வெளியில் இருந்து வந்தவர்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுதித்தியிருந்தார்கள். இவ் சம்பவம் தொடர்பான விசாரணையை இவ் சிறைச்சாலை பொறுப்பதிகாரி கூறியிருந்தார். இங்கு எட்டு கைதிகள் மொத்தமாக உள்ளார்கள். ஆனால் இவர்களில் நால்வரை பொது மன்னிப்பில் உடனயாக விடுதலை செய்யக்கூடிய சூழல் உள்ளது.

 ஆனால் ஜனாதிபதி பல சாட்டுக்கள் சொல்லிக் கொண்டு வருகின்றார். ஜனாதிபதியை ஆதரிப்பவர்கள், அவரது துதி பாடுபவர்கள் இவர்களுக்கான விடுதலைக்கு வலியுறுத்த வேண்டும். பாரிய குற்றம் செய்த கைதிகளுக்கே பிணை மற்றும் விடுதலை கிடைக்கும் போது இவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. அதில் இரு சிறைக் கைதிகள் 28 வருடங்களாக சிறையில் உள்ளார்கள். இவர்களை இவ் வழக்கு முடியும் வரை பிணையில் விடுவிக்க வேண்டும். 

இவர்களை 28 வருடங்களாக துன்பப்படுத்தி அதில் இன்பம் அனுபவிப்பவர்களை எவ்வாறு கூறுவது? எமக்கான தீர்வினைத்தான் தருகின்றார்கள் இல்லை இவர்களின் விடுதலையையாவது உறுத்திப்படுத்துங்கள். இவர்களை வைத்து பலர் அரசியல் செய்கின்றார்கள், தனவந்தர்களாக உள்ளார்கள். அவர்கள் ஒன்றிணைத்து இவர்களது விடுதலைக்கு பாடுபடவேண்டும். என் அதெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!