கனடாவில் வான் விபத்து தொடர்கிறது : உலங்கு வானுார்தி விபத்தில் மூவர் பலி
#Canada
#Crash
#Helicopter
#விபத்து
#லங்கா4
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 canada tamil news
Mugunthan Mugunthan
1 year ago
கனடாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின், பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விபத்து தொடர்பிலான விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. மேலும், சுற்றுலா நிறுவனமொன்றின் ஹெலிகொப்டரில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.