வவுனியா விவசாயிகளிடம் மோசடியில் ஈடுபடும் கொள்வனவாளர்கள்!

#SriLanka #Vavuniya #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
வவுனியா விவசாயிகளிடம் மோசடியில் ஈடுபடும் கொள்வனவாளர்கள்!

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்ய வரும் வெளி மாவட்ட நெல் கொள்வனவாளர்கள் மற்றும் உள்ளூர் நெல் கொள்வனவாளர்கள் நிறுவை தராசுகளில் பாரிய மோசடி மேற்கொண்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்து வருவதாக வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் சி. விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போது அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்யவரும் கொள்வனவாளர்கள் நிறுவை தராசுகளில் மோசடி செய்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்கின்றனர்.

images/content-image/1705914038.jpg

தராசில் இருக்கும் மேல் பகுதியை மாற்றி வைப்பதன் ஊடாக இரண்டு மூடைகளில் சுமார் 15 கிலோ வீதம் விவசாயிகள் நட்டமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், நியாயமாக கொள்வனவு செய்பவர்களை விட 100, 200 ரூபா பணம் அதிகமாக கிடைக்கின்றது என்ற காரணத்தினால் விவசாயிகள் அவ்வாறான கொள்வனவாளர்களிடம் நெல்லை கொடுத்து பல ஆயிரம் ரூபா நட்டம் அடைந்து ஏமாறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!