முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு செல்கின்றனர்

#India #Tamil Nadu #Meeting #Travel #Minister #இளைஞன் #லங்கா4 #ChiefMinister #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு செல்கின்றனர்

சேலத்தில் நாளை திமுக இளைஞர் அணி மாநாடு நடக்கிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் செல்கின்றனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (21ம் தேதி) திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு மிகப் பிரமாண்டமாக நடக்கிறது. 

இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் செல்கின்றனர். மாலை 5 மணிக்கு, சேலம் காமலாபுரம் விமான நிலையம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.என்.நேரு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

images/content-image/1705745053.jpg

 அங்கிருந்து இருவரும் காரில் மாநாட்டு பந்தலுக்கு செல்கின்றனர். வழிநெடுகிலும் திமுகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மாநாடு திடலுக்கு வரும் முதல்வர், ஏற்பாடுகளை பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளுடன் உரையாடுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4