கடக ராசியினருக்கு தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
கடக ராசியினருக்கு தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும் -  ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். ஆதாயம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். பரணி: எதிர்பார்த்த வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் உண்டாகும். ரோகிணி: வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும். அலுவலகப்பணியில் வேலைபளு அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: செயல்களில் பதட்டம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். குழந்தைகள் நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். திருவாதிரை: நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும். பூசம்: வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆயில்யம்: தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். நிதானமுடன் செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். பூரம்: திறமையுடன் செயல்பட்டு எதிர்பார்த்தவற்றில் லாபமடைவீர்கள். எதிர்த்தவர்கள் விலகிச் செல்வார்கள். உத்திரம் 1: அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: நீங்கள் விரும்பாத செயல்கள் இன்று நடக்கலாம். அனைத்திலும் விழிப்புணர்வு தேவை. அஸ்தம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பணியாளர்கள் சிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். சித்திரை 1,2: மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். கவனமுடன் செயல்பட நன்மை அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: வெளியூர் பயணம் லாபத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி: வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். விசாகம் 1,2,3: உங்கள் செயல்களில் இன்று தெளிவு இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயன் தரும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றியடைவீர்கள். அனுஷம்: ஆரோக்கியம் சீராகும். அலுவலகத்தில் இருந்த மறைமுக எதிரிகள் இடம் மாறுவர். கேட்டை: நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்கள். பிறரை அனுசரித்துச்சென்று ஆதாயமடைவீர்கள்.

தனுசு

மூலம்: மற்றவர்களால் செய்திட முடியாத ஒரு செயலை செய்து பாராட்டிற்கு ஆளாவீர்கள். பூராடம்: சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உத்திராடம் 1: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்களுக்காக முயற்சி மேற்கொள்வீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: அரசாங்க விவகாரங்களில் உங்கள் முயற்சி வெற்றியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவோணம்: வழக்கில் வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும். அவிட்டம் 1,2: மற்றவர் பேச்சைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

கும்பம்

அவிட்டம் 3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். நட்பு வட்டம் விரியும். சதயம்: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். பூரட்டாதி 1,2,3: உங்கள் ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படும். போட்டியாளர்களால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வரவு செலவில் இருந்த சங்கடம் தீரும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். ரேவதி: அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். பணத் தேவை அதிகரிக்கும்.