கன்னி ராசியினருக்கு மூன்றாமிட ராகுவால் முன்னேற்றம் தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
கன்னி ராசியினருக்கு மூன்றாமிட ராகுவால் முன்னேற்றம் தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: பண வரவில் இருந்த தடைகள் விலகும். முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். பரணி: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். கடன்களை அடைப்பீர்கள். கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். அரசியல்வாதிகள் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். மிருகசீரிடம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். திருவாதிரை: நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு தொடர்பு லாபமாகும். புனர்பூசம் 1,2,3: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். கடன்களால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். விழிப்புணர்வு அவசியம். பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். ஆயில்யம்: உடல்நிலையில் சங்கடம் தோன்றும். மற்றவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்

மகம்: உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சிகள் எளிதாக நிறைவேறும். பொருள் சேர்க்கை ஏற்படும். பூரம்: எதிர்பாலினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் அகலும். முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் தோன்றும். அஸ்தம்: உடல்நிலை சீராகும். மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். சித்திரை 1,2: தடைகளைக் கண்டறிந்து விலக்குவீர்கள். தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். சுவாதி: உறவுகளால் சில சங்கடங்களை அடைவீர்கள். குடும்பத்திற்குள் கருத்து பேதம் உண்டாகும். விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: உழைப்பு அதிகரிக்கும். பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அனுஷம்: மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி வருமானம் அதிகரிக்கும். கேட்டை: வருவாயைக் கொண்டு கடன்களை அடைப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

தனுசு

மூலம்: கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். பூராடம்: நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயம் தரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: சில சங்கடங்கள் தோன்றும். உங்கள் சாமர்த்தியத்தால் தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். திருவோணம்: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் குழப்பம் வந்து விலகும். சதயம்: நெருக்கடிகள் அதிகரிக்கும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் முதலாளியால் பாராட்டப்படுவீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: அந்நியரால் குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி தோன்றும். உத்திரட்டாதி: வேலைப்பளு அதிகரிக்கும். பயணத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். ரேவதி: வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.