குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய மீன ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய மீன ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வணிகம் புரியும் இடத்தில் சில மாறுதல்கள் செய்வீர்கள். பரணி: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் நினைத்திருந்த செயல்கள் நிறைவேறும். தந்தையின் ஆலோசனை நன்மை தரும். ரோகிணி: பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் செயல்கள் மற்றவர்களால் புகழப்படும். மிருகசீரிடம் 1,2: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீங்கள் நினைத்ததை இன்று நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: இரண்டு நாட்களாக இருந்த தடைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். திருவாதிரை: முயற்சி இழுபறியாகும் என்றாலும் வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளுக்கு காரணத்தை கண்டறிவீர்கள். பயணத்தில் சில நெருக்கடி தோன்றும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் மனம் விரும்பியபடி செயல்படுவீர்கள். நண்பர்கள் உதவியால் செயல் வெற்றியாகும். பூசம்: வாழ்க்கைத் துணையின் உதவியை பெறுவீர்கள். செயல்களில் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம்: பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை அடைவீர்கள். செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். தடைகள் விலகும். பூரம்: ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் அகலும். எதிரிகளின் தொல்லை விலகும். உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் எதிர்பார்த்த வரவில் இழுபறி ஏற்படும். அஸ்தம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சித்திரை 1,2: தேவையற்ற செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். இனம் புரியாத குழப்பம் தோன்றும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் முடிவு லாபத்தை உண்டாக்கும். விசாகம் 1,2,3: உறவினர்கள் வழியில் சில சங்கடங்கள் உண்டாகும் என்றாலும் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: உறவினர்களால் சில சங்கடங்கள் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அனுஷம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். கேட்டை: பழைய முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

தனுசு

மூலம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பூராடம்: முயற்சி தள்ளிப்போகும் என்றாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். உத்திராடம் 1: நீண்டநாள் பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும். நிதிநிலை உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். திருவோணம்: தடைபட்டிருந்த செயல் வெற்றியாகும். மனம் மகிழும்படியான சம்பவம் நடைபெறும். அவிட்டம் 1,2: வரவை வைத்து கடன்களை அடைப்பீர்கள். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். தொழிலை விரிவு செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். சதயம்: செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி வந்துசேரும். உங்கள் செயல்களில் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: செலவுகள் வழியே நீண்டநாள் முயற்சி நிறைவேறும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உற்சாகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். உத்திரட்டாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். ரேவதி: உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று எளிதாக நிறைவேறும். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.