உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய மேஷ ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய மேஷ ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் நீங்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். பரணி: நிதிநிலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை 1: உடல்நிலையில் உண்டான சங்கடம் விலகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். 

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: உங்கள் முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் அதிகரிக்கும். ரோகிணி: முயற்சியில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும். மிருகசீரிடம் 1, 2: மனதில் குழப்பம் அதிகரிக்கும். மற்றவரால் சில பிரச்னைகளை சந்திக்க நேரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4: எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத்துணையின் எண்ணம் புரிந்து செயல்படுவீர்கள். திருவாதிரை: விரும்பும் வகையில் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள். புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த சங்கடங்களை சரிசெய்வீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். 

கடகம்

புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த ஒரு செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பூசம்: தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலவீனம் அடைவார்கள். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். 

சிம்மம்

மகம்: அரசு வழி செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சிகள் வெற்றியாகும். பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை நீங்கள் சாதிப்பீர்கள். உத்திரம் 1: பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். 

கன்னி

உத்திரம் 2, 3, 4: மனம் காட்டும் வழியில் செல்வீர்கள். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தாய்வழி உறவினர்கள் ஆதரவால் ஒரு முயற்சி நிறைவேறும். சித்திரை 1, 2: நீண்டநாள் விருப்பம் இன்று நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

துலாம்

சித்திரை 3, 4: வாழ்க்கைத் துணையின் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும். சுவாதி: பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று எளிதாக நிறைவேறும். 

விருச்சிகம்

விசாகம் 4: நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் வீடுதேடி வரும். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் தோன்றும். அனுஷம்: வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கேட்டை: அலுவலகத்தில் மறைமுகத் தொல்லைகள் தோன்றும் என்பதால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. 

தனுசு

மூலம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்கள். பூராடம்: அலுவலகத்தில் உள்ள மறைமுக எதிரியை தெரிந்து கொள்வீர்கள். முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டு. உத்திராடம் 1: திட்டமிட்ட செயலை நடத்தி முடிப்பீர்கள். அரசு வழியில் ஆதாயம் காண்பீர்கள். 

மகரம்

உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் உடலில் சோர்வு உண்டாகும். திருவோணம்: உங்கள் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். நட்பு வட்டம் விரியும். அவிட்டம் 1, 2: செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் விருப்பம் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

கும்பம்

அவிட்டம் 3, 4: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்ளாமல் போவார்கள். சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். நண்பர்கள் உதவியால் ஒரு முயற்சி நிறைவேறும். பூரட்டாதி 1, 2, 3: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடுதேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். 

மீனம்

பூரட்டாதி 4: வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். ரேவதி: வியாபாரத்தில் உண்டான தடைகள் விலகும். வருவாய் அதிகரிக்கும்.