வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய மூன்று ராசியினர் , அதிலும் ரிஷப ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய மூன்று ராசியினர் , அதிலும் ரிஷப ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: மதியம்வரை முயற்சி வெற்றியாகும் பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயலில் நிதானம் அவசியம். பரணி: உங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நெருக்கடிகள் நீங்கும். கோயில் வழிபாடு நன்மை தரும். கார்த்திகை 1: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டிருந்த முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ரோகிணி: தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த பணம் வரும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த மந்தநிலை விலகும். பண வரத்து அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் எண்ணம் நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திருவாதிரை: விரைந்து செயல்பட்டு எடுத்த வேலையை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருவாய் உண்டு. புனர்பூசம் 1,2,3: எதிர்ப்புகள் விலகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

கடகம்

புனர்பூசம் 4: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். பூசம்: திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: உங்களின் முயற்சி தள்ளிப்போகும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்

மகம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். கணக்கு வழக்கில் கூடுதல் கவனம் தேவை. பூரம்: குடும்பத்தில் குழப்பம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். கோயில் வழிபாடு அமைதி தரும். உத்திரம் 1: வரவு அதிகரிக்கும் என்றாலும் வியாபாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். கவனம் தேவை.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். சகோதரர்களால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். அஸ்தம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கடன்களால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். சித்திரை 1,2: பலநாட்களாக நிறைவேறாமல் இருந்த வேலை இன்று எளிதாக நிறைவேறும். 

துலாம்

சித்திரை 3,4: காலையில் இருக்கும் குழப்பம் மதியத்திற்குமேல் மறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் தீரும். 

விருச்சிகம்

விசாகம் 4: முயற்சியில் மதியம் வரை இழுபறி இருக்கும். அதன்பின் அந்நிலை சரியாகும். அனுஷம்: பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு பணியாளர்களுடன் பிரச்னைகள் ஏற்படும். கேட்டை: நீங்கள் எதிர்பார்த்த பணம் மாலை நேரத்தில் வந்து சேரும். நெருக்கடி நீங்கும். 

தனுசு

மூலம்: மதியம்வரை வரவு இருக்கும். அதன்பின் எதிர்பாராத செலவு தோன்றும் என்பதால் கவனம் தேவை. பூராடம்: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். உத்திராடம் 1: எதிர்பாராத சங்கடங்களை இன்று சந்திப்பீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நண்பர்கள் வழியே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம்: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய முதலீட்டில் இருந்து ஆதாயம் தோன்றும்.

கும்பம்

அவிட்டம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். சதயம்: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். பணியிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். நண்பர்கள் உதவியால் பிரச்னைகள் தீரும். 

மீனம்

பூரட்டாதி 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த செயலில் லாபம் உண்டாகும். ரேவதி: மதியம்வரை முயற்சியில் நெருக்கடிகள் உண்டானாலும் அதன்பின் நிலைமை சீராகும்.