பயணங்கள் மற்றும் வாகனம் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய மீன ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
பயணங்கள் மற்றும் வாகனம் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய மீன ராசியினர் - ராசிபலன்

மேஷம்:

அசுவினி: நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாப நிலை உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும். பரணி: வழக்கமான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும். கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். ரோகிணி: ஆரோக்கியம் மேம்படும். விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள். மிருகசீரிடம் 1,2: பிறருக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மனதில் உண்டான குழப்பம் விலகும். பிள்ளைகள் வழியில் நன்மை அதிகரிக்கும். திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர்கள். வருமானத்தில் இருந்த தடை அகலும். புனர்பூசம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் குடும்பப் பிரச்னை தீரும். பூசம்: புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். விலகிச்சென்ற உறவுகள் உங்கள் இல்லம்தேடி வருவார்கள். ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். ஆடம்பர செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

மகம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். பூரம்: வியாபாரத்தின் நுணுக்கங்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள். உத்திரம் 1: உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறவுகளை அனுசரித்துப் போவது நன்மையாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் தேவை. சொத்துப்பிரச்னை உங்களுக்கு சாதகமாகும். அஸ்தம்: துணிச்சலாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: எதிரிகளால் உண்டான நெருக்கடிகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். சுவாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அனுஷம்: அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். கேட்டை: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.

தனுசு

மூலம்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உத்திராடம் 1: வரவு கூடும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். திருவோணம்: உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். அவிட்டம் 1,2: தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பர்.

கும்பம்

அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். சதயம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உடல்நிலையில் சங்கடங்கள் தோன்றும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் சிறு பிரச்னை தோன்றும். வார்த்தைகளில் கவனம் தேவை

மீனம்

பூரட்டாதி 4: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். உத்திரட்டாதி: பணியிடத்தில் மறைமுகத் தொல்லைகள் உண்டாகும். அதனால் மனதில் குழப்பம் தோன்றும். ரேவதி: உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள். வாகனத்தை இயக்குவதில் கவனம் அவசியம்.