உடல்நிலையில் கவனம் செலுத்தவேண்டிய கும்ப ராசியினர் -இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
உடல்நிலையில் கவனம் செலுத்தவேண்டிய கும்ப ராசியினர் -இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயல்கள் லாபமாகும். கார்த்திகை 1: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்ப்புகள் விலகும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி கொடுக்கும். மிருகசீரிடம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்குவரும். எதிர்ப்பு விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். திருவாதிரை: பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: முயற்சிகளில் இருந்த தடை விலகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் செயல்களில் சில தடைகள் ஏற்படும். பணியிடத்தில் எச்சரிக்கை அவசியம். பூசம்: செயல்களில் நெருக்கடி உண்டாகும். கடும் போராட்டத்திற்கு பின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்கள் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத செயலை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: குழப்பம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமானம் அதிகரிக்கும். அஸ்தம்: வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். சித்திரை 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தினர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் கவனக்குறைவால் ஒரு முயற்சி நிறைவேறாமல் போகும். நிதானமாக செயல்பட நன்மையாகும். சுவாதி: உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும். விசாகம் 1,2,3: விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடிவந்து சமாதானம் பேசுவார்கள். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: வரவுகள் அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவுகளால் சங்கடம் அடைவீர்கள். அனுஷம்: உழைப்பின் வழியே செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். கேட்டை: வாகன வகையில் செலவு ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். வரவு செலவில் கவனம் தேவை.

தனுசு

மூலம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பெரியவர்கள் ஆதரவு உங்கள் எண்ணத்தை நிறைவேற்றும். பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்திராடம் 1: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு நண்பர்கள் வழியே நல்ல செய்தி வரும். திருவோணம்: வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துசேரும். அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி ஒன்று நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சதயம்: செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சியில் நெருக்கடி ஏற்பட்டாலும் நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும். உங்களது செயலில் நெருக்கடி தோன்றும். உத்திரட்டாதி: சந்திராஷ்டமம் என்பதால் முயற்சியில் சங்கடங்கள் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். ரேவதி: உங்கள் கவனக்குறைவால் சில பிரச்னைகள் உண்டாகும். வரவு இழுபறியாகும்.