ஒரு நொடி அளவில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வியாபாரி : நெஞ்சம் பதற வைக்கும் சிசிடிவி காட்சி

#India #Tamil Nadu #Tamilnews
Soruban
2 years ago
ஒரு நொடி அளவில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  வியாபாரி : நெஞ்சம் பதற வைக்கும் சிசிடிவி காட்சி

ஆரணி அருகே சாலையோர வியாபாரியை லாரி மோதியதில் வியாபாரி ஒரு நொடி அளவில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சியால் நெஞ்சம் பதற வைக்கின்றன 

 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் பகுதி ஆரணி-வேலூர் சாலையில் 30க்கும் மேற்பட்ட சாலை ஓரம் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர் இன்று காலை ஆரணி வேலூர் சாலையில் சாலை ஓர வியாபாரி ஒருவர் பிஸ்கட் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார் அப்பொழுது வெண்பாக்கம் பகுதியில் இருந்து வேலூருக்கு சாலை அமைக்க தார் ஏற்றி சென்ற லாரி சாலை ஒரு வியாபாரியின் மீது மோதியது லாரி மோதிய பின்பு சட்டென்று சுதாரித்துக் கொண்டு எழுந்ததால் வியாபாரி ஒரு நொடி அளவில் உயிர் தப்பினார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் வியாபாரியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் 

 இந்த விபத்து சம்பவம் அருகே இருந்த ஒரு கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது இச்சம்பவம் குறித்து ஆரணி கிராமியப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் ஆரணி அருகே சாலை ஓர வியாபாரி மீது லாரி மோதி வியாபாரி உயிர் தப்பிய சிசிடிவி காட்சியால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

https://youtu.be/CK28hF39dnM
Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4