மகர ராசியினருக்கு வழிபாடு மனச்சுமையை அகற்றும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
மகர ராசியினருக்கு வழிபாடு மனச்சுமையை அகற்றும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் நினைத்ததை இன்று நடத்தி முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். பரணி: குரு வழிபாடு நன்மை தரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சியை ஒத்தி வைப்பீர்கள். கார்த்திகை 1: நண்பர்கள் உங்கள் செயலுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தாமதமாக நிறைவேறும். பணவரவு இழுபறியாகும். ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை: அரசு வழியில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் அவசியம். புனர்பூசம் 1,2,3: தாய்வழி உறவினர்களின் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் உதவி உண்டு. பூசம்: பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். முடிவு உங்களுக்கு சாதகமாகும். பாராட்டிற்கு ஆளாவீர்கள். ஆயில்யம்: சகோதரர்கள் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம். பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உத்திரம் 1: குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். அஸ்தம்: இழுபறியாக இருந்த செயல் பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சித்திரை 1,2: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும்.

துலாம்

சித்திரை 3,4: வெளியூர் பயணமும் அலைச்சலும் ஏற்படும். வரவு செலவில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். சுவாதி: உங்கள் செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். விசாகம் 1,2,3: எதிர்ப்பு விலகும். குடும்ப வகையில் திடீர் செலவுகள் தோன்றும். பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அனுஷம்: நண்பர்களால் உங்கள் செயலில் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். கேட்டை: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். முயற்சி பலிதமாகும். கடன்களை அடைப்பீர்கள். பூராடம்: உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம். உத்திராடம் 1: பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் சங்கடம் தோன்றும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும். திருவோணம்: வழிபாடு மனச்சுமையை அகற்றும். எந்த ஒன்றிலும் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பாராத வரவால் பொருளாதார நெருக்கடி நீங்கும். சதயம்: வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். பூரட்டாதி 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அடுத்தவர் பிரச்னையில் இன்று தலையிட வேண்டாம்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய நண்பரால் உங்கள் எண்ணம் நிறைவேறும். ரேவதி: எதிர்பார்த்த உதவி வந்து சேரும். பொருளாதார நெருக்கடி நீங்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.