பிறந்த 2024ம் புத்தாண்டிற்கான ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #New Year #2024 #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
பிறந்த 2024ம் புத்தாண்டிற்கான ராசிபலன்

மேஷம்

அசுவினி: கோயிலுக்கு செல்வீர்கள். செயல்களில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். வரவு அதிகரிக்கும். பரணி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உங்கள் செயல்கள் நினைத்தபடி நடந்தேறும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தாய்வழி உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும். ரோகிணி: உங்கள் வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். நண்பர்களின் ஆதரவு உண்டு.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முயற்சி நடந்தேறும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயம் தரும். அரசியல் வாதிகள் எண்ணம் நிறைவேறும். புனர்பூசம் 1,2,3: மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பூசம்: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். ஆயில்யம்: உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். பூரம்: கூட்டுத் தொழிலில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். நண்பர்களால் பாராட்டப்படுவீர்கள். உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர்கள். கவனக்குறைவால் சில சங்கடங்கள் தோன்றும். 

கன்னி

உத்திரம் 2,3,4: திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். செலவுகள் கூடும். வருவாயில் நெருக்கடி ஏற்படும். அஸ்தம்: தேவையற்ற குழப்பம் தோன்றும். உறவினருடன் சங்கடம் உண்டாகும். கவனமுடன் செயல்படவும். சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். வரவை விட செலவு அதிகரிக்கும். 

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். சுவாதி: லாபகரமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். விரும்பியதை அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். 

விருச்சிகம்

விசாகம் 4: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள். அனுஷம்: வியாபாரத்தில் உங்களது முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். கேட்டை: நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். 

தனுசு

மூலம்: கடந்தகால அனுபவத்தைக் கொண்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பூராடம்: தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்திராடம் 1: மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நேற்று உண்டான சங்கடங்கள் இன்று இல்லாமல் போகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருவோணம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நன்மையாகும். அவிட்டம் 1,2: வீண் சச்சரவுகள் உங்களைத் தேடிவரும். நிதானத்தைக் கடைபிடித்து பொறுமையுடன் செயல்படுங்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சிறு சலசலப்பு தோன்றி மறையும். சதயம்: தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னைகள் விலகும் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை. பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: மனதில் ஆசை அதிகரிக்கும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உத்திரட்டாதி: உடம்பில் இருந்த சங்கடம் நீங்கும். எச்சரிக்கையுடன் செயல்படுவதால் நன்மை உண்டாகும். ரேவதி: நண்பர்களால் உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.