கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த கும்பல்!
கிளிநொச்சியில் இன்று (30.12) இடம்பெற்ற மலையகம் 200 நிகழ்வுக்கு இந்திய ஷீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப போட்டியில் பங்குபற்றிய மலையக குயில் அசானி கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது சமூகவலைத்தளம் ஒன்றிலிருந்து வருவதாக கூறிய ஒரு குழுவினர், மிகவும் கீழ்தரமான வார்த்தைகளை பிரயோகித்து குழப்பம் விளைவித்துள்ளனர்.
இதனால் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வரும்முன் அசானியை வலுக்கட்டாயமாக இறக்கி மங்கள வாத்திய கலைஞர்களையும் இசைக்கும்படியும், நடனக்குழுவினரை ஆடுமாறு பணித்தும் வலுக்கட்டாயமாக அசானியை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைத்து அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.