வடக்கு மெக்ஸிகோவில் துப்பாக்கிச்சூடு : 06 பேர் உயிரிழப்பு, 26 பேர் காயம்!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வடக்கு மெக்ஸிகோவில் துப்பாக்கிச்சூடு : 06 பேர் உயிரிழப்பு, 26 பேர் காயம்!

வடக்கு மெக்ஸிகோவில் இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இறந்தவர்களில் இருவர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், காயமடைந்தவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் எனவும் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்களில் நால்வர் உள்ளூர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மேலும் 13 பேர் சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியுடாட் ஒப்ரெகன் நகரில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய, தாக்குதல்தாரி விருந்தில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடம் மற்றுமொரு தாக்குதல் தாரி தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், பொலிஸாரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4