சுயதொழில் புரியும் மீன ராசியினருக்கு லாபம் அதிகரிக்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
சுயதொழில் புரியும் மீன ராசியினருக்கு லாபம் அதிகரிக்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் வேலைகளில் நெருக்கடி தோன்றும். பிறர் பிரச்னையில் தலையிட வேண்டாம். பரணி: நீண்ட முயற்சிக்குப்பின் எண்ணம் நிறைவேறும். தாய் வழி உறவினர் உதவி புரிவர். கார்த்திகை 1: உடல்நிலை சீராகும். உறவு வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். ரோகிணி: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உங்கள் முயற்சி பலிதமாகும். வருமானம் உயரும். மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர். விலகிச் செல்வர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. திருவாதிரை: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்களை விமர்சனம் செய்தவர்கள் உங்களையே பாராட்டுவர். புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். 

கடகம்

புனர்பூசம் 4: வேலை பளு அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் வரும். செயல்களில் கவனம் தேவை. பூசம்: மேற்கொள்ளும் முயற்சியில் இழுபறி உண்டாகும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக மாற்றம் உண்டாகும். ஆயில்யம்: எதிர்பார்த்த தகவல் வரும். மனக்குழப்பம் விலகும். பயணத்தினால் லாபம் உண்டாகும். 

சிம்மம்

மகம்: பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். எதிரிகளால் நெருக்கடி தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பூரம்: வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு தோன்றும். சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்திரம் 1: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வருவாய் வரும். குழப்பமின்றி செயல்படுவதால் நிதிநிலை உயரும். அஸ்தம்: உங்கள் முயற்சி லாபமாகும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி தீரும். சித்திரை 1,2: வரவேண்டிய பணம் வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும். 

துலாம்

சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவுவார்கள். சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விசாகம் 1,2,3: உங்கள் எண்ணம் இன்று பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். 

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் ஒரு செயல் சாதகமாகும். அனுஷம்: முன்னோர் அருளினால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பிரச்னை முடிவிற்கு வரும். கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: நேற்று இழுபறியான முயற்சி இன்று நிறைவேறும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பில் இன்று இழுபறியும், பொருளாதார சங்கடம் தோன்றும். வரவு செலவில் சிக்கல்களை சந்திப்பீர். உத்திராடம் 1: வேலையில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போகும். வீண் பிரச்னைக்கு ஆளாவீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைவீர். திருவோணம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அவிட்டம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: எதிரிகளால் உண்டான தொல்லை நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சதயம்: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் வெற்றி உண்டாகும். பிறரால் உதவி அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: உங்கள் விருப்பம் நிறைவேறும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகுவர்.

மீனம்

பூரட்டாதி 4: நீண்டநாள் பிரச்னை முடிவிற்குவரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். உத்திரட்டாதி: நெருக்கடி அதிகரிக்கும். சுயதொழில் புரிவோருக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரேவதி: ராகு ரகசிய செயல்களில் ஈடுபட வைப்பார் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.