தகாத உறவு கொண்டதற்காக கணவரின் உடலுறுப்பை வெட்டிய மனைவி

#Arrest #Women #world_news #Attack #Brazil #husband #Knife #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
தகாத உறவு கொண்டதற்காக கணவரின் உடலுறுப்பை வெட்டிய மனைவி

பிரேசிலிய பெண் ஒருவர் தனது கணவரை கொலை செய்ய முயற்சித்த நோக்கத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

சாவ் பாலோவிற்கு அருகிலுள்ள அதிபாயாவில் வசிக்கும் குறித்த பெண் தனது கணவரின் ஆணுறுப்பை வெட்டியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தனது 15 வயது மருமகளுடன், கணவர் உடல் உறவு கொண்டமை தெரியவந்த நிலையில், தான் மேற்படி செய்ததாக விளக்கமளித்துள்ளார்.

துண்டிக்கப்பட்ட உறுப்பை கழிப்பறையில் வீசுவதற்கு முன், அந்த பெண் உடல் உறுப்புகளை அகற்றி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற குறித்த பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

அத்துடன், துண்டிக்கப்பட்ட ஆண்குறியை “மீண்டும் பொருத்துவது சாத்தியம்” என்று தான் கேள்விப்பட்டதாகவும், அதனால் தான் அதை சுத்தப்படுத்தியதாகவும் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் அந்த பெண் விளக்கியுள்ளார்.

 மிருகத்தனமான தாக்குதலில் உயிர் பிழைத்த 39 வயதான கணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தற்போதைய உடல்நிலை தெளிவாக தெரியவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4