மகர ராசியினருக்கு மூன்றாமிட ராகுவால் முன்னேற்றம் தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4_news #lanka4.com
Prasu
3 months ago
மகர ராசியினருக்கு மூன்றாமிட ராகுவால் முன்னேற்றம் தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் வருமானம் அதிகரிக்கும். சங்கடம் விலகும். பரணி: சந்திரனால் அலைச்சல் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் இழுபறி உண்டாகும். கார்த்திகை 1: உடல்நிலை சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பு விலகும். எதிர்ப்பு நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: ராகுவால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். ரோகிணி: உங்கள் செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பாராத லாபம் ஏற்படும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வரும். நிதானித்து செயல்படுவது நல்லது. திருவாதிரை: பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பத்தின் விருப்பம் நிறைவேறும். புனர்பூசம் 1,2,3: நேற்று தடைபட்டிருந்த முயற்சி நிறைவேறும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பூசம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆயில்யம்: செயல்களில் சங்கடம் தோன்றினாலும் முயற்சி வெற்றியாகும். உங்களை மாற்றிக்கொள்வீர்.

சிம்மம்

மகம்: குடும்பத்தில் குழப்பம் தோன்றும். புதிய திட்டங்களோ முயற்சியோ இன்று வேண்டாம். பூரம்: வரவைவிட செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். உத்திரம் 1: மேற்கொண்ட முயற்சி தள்ளிப்போகும். புதிய செயல்களில் ஈடுபடுவதும் முதலீடு செய்வது வேண்டாம்.

கன்னி

உத்திரம் 2,3,4: சந்திரனால் இழுபறியாக இருந்த உங்கள் முயற்சி லாபமாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அஸ்தம்: விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். சித்திரை 1,2: வியாபாரத்தில் நெருக்கடி குறையும். இழுபறியாக இருந்த முயற்சி லாபமாகும்.

துலாம்

சித்திரை 3,4: ராசிக்கு குருவின் பார்வை உண்டாகி இருப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். சுவாதி: பழைய செயல் ஒன்றிலிருந்து பணம் வரும். உங்கள் தடையாக இருந்தவர் விலகிச் செல்லுவர். விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். விருப்பம் நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

விசாகம் 4: பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். போட்டியாளர்கள் கை ஓங்கும். அனுஷம்: தடைகளைத் தாண்டி சாதிப்பீர். மற்றவர்களால் முடியாத ஒன்றை முடித்துக் காட்டுவீர். கேட்டை: குடும்ப பிரச்னையை லாவகமாக கையாளுவீர். சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கும்.

தனுசு

மூலம்: உங்கள் முயற்சிகளில் நிதானம் அவசியம். யோசித்து செயல்படுவது நல்லது. பூராடம்: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். நீங்கள் எதிர்பார்த்ததை அடைய முயற்சி தேவை. உத்திராடம் 1: மனதில் தேவையற்ற குழப்பம் தோன்றும்.புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மூன்றாமிட ராகுவால் முன்னேற்றம் தோன்றும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருவோணம்: தம்பதிகளுக்கிடையே இருந்த பிரச்னை தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர். அவிட்டம் 1,2: சந்திரனால் செயல் கை கூடும். பெரியோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. 

கும்பம்

அவிட்டம் 3,4: ராகுவால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். நினைத்ததை செய்து முடிப்பீர். சதயம்: சிலரின் விமர்சனம் கண்டு அஞ்சாதீர். உடல் நிலையில் சங்கடம் தோன்றி மறையும். பூரட்டாதி 1,2,3: வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். 

மீனம்

பூரட்டாதி 4: ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவால் செயல்களில் சில சங்கடம் தோன்றும். உத்திரட்டாதி: தம்பதிகளுக்குள் வீண் பிரச்னை உருவாகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். ரேவதி: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். உறவினர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்.