பாண் விற்பனை வண்டியில் போதைப்பொருள் கடத்தல் - ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#Food
#drugs
#Tamilnews
#Smuggling
#vehicle
#lanka4Media
#lanka4.com
Prasu
2 years ago
மிரிஹான பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனை செய்வதுடன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகிகப்படும் நிலையில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடத்திலிருந்து 28 போத்தல்கள் அடங்கிய 37,000 லீட்டர் நிறையுடைய சட்டவிரோத மதுபானம் , 1,200 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மிகவும் தந்திரமான முறையில் முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.