ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

#America #world_news #Attack #Drone #Ship #rebel #Houthi #RedSea #lanka4Media #lanka4.com #LANKA4TAMILNEWS
Prasu
2 years ago
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

இஸ்ரேல் ராணுவம்-காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையிலான போா் கடந்த அக். 7ந் தேதி தொடங்கியதிலிருந்து இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹவுதி.

சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுடன் ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய வா்த்தகப் பாதையை ஹவுதி அமைப்பினா் சீா்குலைத்துள்ளனா். 

இந்தப் பாதையையே பல கப்பல்கள் தவிா்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கும் வழிவகுத்துள்ளது.

 இந்நிலையில் செங்கடல் பகுதியைக் கடந்த ஒரு கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் உள்ளிட்ட தாக்குதல்களை ஹவுதி அமைப்பினா் நடத்தியதாகவும், அதனை முறியடிக்கும் விதமாக அமெரிக்க ராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. 

10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், மூன்று கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்தபகுதியில் உள்ள கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் எந்த நபர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4