ஆஸ்கார் விருது வென்ற தென் கொரிய நடிகர் மர்ம மரணம்

#Death #Actor #Hospital #world_news #SouthKorea #vehicle #lanka4Media #lanka4_news #lanka4.com
Prasu
2 years ago
ஆஸ்கார் விருது வென்ற தென் கொரிய நடிகர் மர்ம மரணம்

ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல தென் கொரிய நடிகர் லீ சுன்-கியூன் (வயது 48) மர்மமான முறையில் மரணம் அடைந்தார். 

மத்திய சியோலில் உள்ள ஒரு பார்க்கில் அவர் தனது காருக்குள் இன்று இறந்து கிடந்ததாக தென் கொரிய அவசரகால சேவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடிகர் லீ சுன்-கியூனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

லீ சுன்-கியூன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன வருத்தத்தில் இருந்த நடிகர் லீ சுன்-கியூன் தற்கொலை குறிப்பு போன்ற ஒரு தகவலை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது குடும்பத்தினர் கூறியதையடுத்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள் என முன்னதாக செய்திகள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில் அவர் காருக்குள் சடலமாக கிடந்ததால், தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4