தீடீரென ஏற்பட்ட மின் தடை தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Electric #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
தீடீரென ஏற்பட்ட மின் தடை தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு தங்களது தரப்பில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என இலங்கை மின்சார சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தின்போது இலங்கை மின்சார சபையின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

images/content-image/2023/12/1703673583.jpg

கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் நாடு முழுவதும் கடந்த 9 ஆம் திகதி மின்சார விநியோகம் தடைபட்டது.

இந்தநிலையில், சீரமைப்பு பணிகளின் பின்னர் சுமார் 5 மணித்தியாலங்களின் பின்னர் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்வது தொடர்பில் எதிர்வரும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!