வர்த்தகர்கள் படுகொலை முயற்சி - ஆயுதங்களுடன் சிக்கிய பாதாள குழு உறுப்பினர்!

#SriLanka #Arrest #Police #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
வர்த்தகர்கள் படுகொலை முயற்சி - ஆயுதங்களுடன் சிக்கிய பாதாள குழு உறுப்பினர்!

பாதாள உலகக் குழுத் தலைவரான ஹீனட்டியன மஹேஷின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

“யுக்தி” நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் கொலைக்கு தயாராக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

images/content-image/2023/12/1703668236.jpg

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, ​​அவரிடம் இருந்து ஒன்பது மி.மீ ரக 05 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரின் மேலதிக விசாரணையில் அவர் 'ஹீனடியன் மகேஷ்' என்பவரின் உதவியாளர் என்பதும் இரண்டு வர்த்தகர்களை கொல்ல ஒப்பந்தம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், கொலைக்கு பயன்படுத்த தயாராக இருந்த ஒன்பது மிமீ ரக துப்பாக்கி மற்றும் ரவைகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!