பிக்போஸ் தர்ஷன் லொஸ்லியா இப்பொழுது என்ன செய்கிறார்கள்?
அயராத உழைப்பினால் பிக்பொக்ஸ் குடும்பத்தில் இணைந்து உலகளாவிய ரீதியில் பிரபல்யமானவர்கள் தர்சன் மற்றும் லொஸ்லியா இலங்கையில் இருந்து தென்னிந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்றின் பிக்பொக்ஸ் நிகழ்ச்சிக்காக தர்சன் மற்றும் லொஸ்லியா ஆகிய இருவரும் சென்றனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பின்னர் அங்கிருந்து இருவரும் பெரிய எதிபார்ப்போடு வெளியே வந்தார்கள் வெளியில் மீடியாகளும் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என ஆரூடம் கூறினார்கள்.
இருந்தும் அரம்பத்தில் இருவருக்கும் சினிமாவில் ஒரு சில வாய்ப்புக்கள் கிடைத்தது. பின்னர் இருவரும் இணைந்து கூட ஒரு படம் நடித்தார்கள் அது என்னவாகியது என்று தெரியாமல் காற்றில்லாத கடற்கரைபோல அமைதியாகிவிட்டது.

தற்போதும் தமது நோக்கை நோக்கியே ஓடுகிறோம் என அவர்களின் நகர்வு ஓடிக்கொண்டிருக்கிறது.
லொஸ்லியா தன் எடையை குறைத்து பல போட்டோ சூட் செய்து மேலும் பயணத்தை தொடர்கிறார். தர்ஷன் தனது உடலை மெருகேற்றி மற்றும் சில நடனம், சண்டை பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அதை தாண்டி இருவருக்கும் வெளிநாடுகளில் இருந்து வரண் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ இருவரும் முன்னேற #lanka4 ஊடகம் வாழ்த்துகிறது.
செய்தி:-
லங்கா4 ஊடகம்