வேலுாரில் பார ஊர்தி மேம்பாலத்தில் மோதியதால் தீ விபத்துக்குள்ளானது

#India #Accident #Lanka4 #தீ_விபத்து #fire #லங்கா4 #இந்தியா
வேலுாரில் பார ஊர்தி மேம்பாலத்தில் மோதியதால் தீ விபத்துக்குள்ளானது

வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று, சேலம் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. லாரியை வேலூர் தெல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசம்(42) என்பவர் ஓட்டி வந்தார். 

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ரயில்வே மேல்பாலம் அருகே நள்ளிரவு 1 மணியளவில் மேம்பாலத்தில் ஏறி, கீழே இறங்கிய போது, மேம்பாலம் குறுகலாக உள்ளதால் நிலை தடுமாறிய லாரி, சென்டர் மீடியனில் எதிர்பாராத விதமாக மோதி தீப்பிடித்தது. 

images/content-image/1703515902.jpg

இதனால் லாரி முழுவதும் பற்றி எரிந்தது. லாரியில் இருந்து குதித்து லாவகமாக டிரைவர் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், தர்மபுரி தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இருப்பினும் லாரி முழுவதும் எரிந்த நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4