சுலவேசியில் உள்ள நிக்கல் தொழிற்சாலையில் வெடி விபத்து : பலர் பலி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுலவேசியில் உள்ள நிக்கல் தொழிற்சாலையில் வெடி விபத்து : பலர் பலி!

இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள நிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த சீன நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 இந்தோனேசிய பிரஜைகளும் 5 சீன பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

பழுதுபார்க்கும் பணியின் போது இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், வெடிப்புடன் ஏற்பட்ட தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4