வயல் பகுதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் - திருகோணமலையில் சம்பவம்!

#SriLanka #Trincomalee #Death #Police #Investigation
PriyaRam
1 year ago
வயல் பகுதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் - திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை நாமல்வத்தை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா -குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீக் முகமது முஸம்மில் வயது 34 எனவும் தெரியவருகிறது.

images/content-image/2023/12/1703330705.jpg

கிண்ணியாவில் இருந்து நாமல்வத்தை பகுதியில் உள்ள வயலுக்கு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக கத்தியை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் மாலை நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் வயல் பகுதிக்கு தேடி சென்ற போது வயலுக்குள் வரம்பில் விழுந்து கிடந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!