குடும்பம் மற்றும் வெளியூர் பயணங்களில் கவனம் செலுத்த வேண்டிய கும்ப ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
4 months ago
குடும்பம் மற்றும் வெளியூர் பயணங்களில் கவனம் செலுத்த வேண்டிய கும்ப ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். பரணி: நீங்கள் திட்டமிட்டிருந்த வேலையில் குழப்பம் தோன்றும். வேலைகளால் நெருக்கடி அதிகரிக்கும். கார்த்திகை 1: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. செலவுகளில் கவனம் வேண்டும். ரோகிணி: வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2: வேலை பளுவால் சங்கடப்படுவீர். எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்கள் உதவியால் முயற்சி நிறைவேறும். திருவாதிரை: தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். தடைபட்டி கோயில் திருப்பணியில் பங்கேற்பீர். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: தொழிலை மாற்றம் செய்ய திட்டமிடுவீர். எதிர்பார்த்த பணம் வரும். எண்ணம் நிறைவேறும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆயில்யம்: பொருள்களை விற்பனை செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்குவீர். முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டிருந்த செயல் நடந்தேறும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூரம்: கவனமுடன் செயல்படுவீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். உத்திரம் 1: செல்வாக்கு உயரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனதில் பதட்டம் அதிகரிக்கும். உறவுகள் வழியிலும் சங்கடங்களை சந்திப்பீர். அஸ்தம்: அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும். எதிர்பார்த்த ஆதாயத்தில் தடை உண்டாகும். சித்திரை 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டி வரும். வம்பு வழக்கு தோன்ற வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை தேவை.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் நீங்கும். சுவாதி: உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். விசாகம் 1,2,3: முயற்சிகளில் ஏற்பட்ட தடை விலகும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்களிடம் நன்றாக பழகியவர்களே உங்களுக்கு எதிரியாவார். தொழிலில் போட்டி அதிகரிக்கும். அனுஷம்: மறைமுக எதிரிகளை அடையாளம் காண்பீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். கேட்டை: வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். முயற்சியில் பின்னடைவு ஏற்படும். கோபம் வேண்டாம்.

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம்: உறவினர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் திறமை வெளிப்படும். உத்திராடம் 1: உங்கள் செயல் லாபமடையும். பிள்ளைகள் உதவியால் முயற்சி நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு ஒரு சிலர் உங்களை அழைத்துச் செல்ல முயற்சிப்பர். திருவோணம்: திட்டமிட்டிருந்த செயல் வெற்றியாகும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். அவிட்டம் 1,2: முயற்சி இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும். சிலரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் சில சங்கடம் தோன்றும். சதயம்: குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். வாழ்க்கைத் துணையால் விருப்பம் நிறைவேறும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும் செயல் நிறைவேறாமல் இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும்.

மீனம்

பூரட்டாதி 4: நண்பர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் வரும். உத்திரட்டாதி: உங்கள் விருப்பம் நிறைவேறும். பண வரவில் இருந்த தடை விலகும். நட்புகளிடம் எச்சரிக்கை தேவை . ரேவதி: வெளியூர் பயணத்தில் சில சங்கடம் தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.