சீனா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

#China #Death #Hospital #world_news #Earthquake #Rescue
Prasu
2 years ago
சீனா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் கடந்த 19-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதனால் சீனாவில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளன. 

இதில், கன்சு மாகாணத்தில் 117 பேரும், குயின்காங்கில் 31 பேரும் பலியாகியுள்ளனர். இரு மாகாணங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4