நீரில் மூழ்கி சிறுமி பலி - வவுனியாவில் சம்பவம்!

#SriLanka #Vavuniya #Death #Police #Investigation
PriyaRam
1 year ago
நீரில் மூழ்கி சிறுமி பலி - வவுனியாவில் சம்பவம்!

வவுனியா - பாவற்குளத்தில் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாவற்குளம் பகுதிக்கு சென்ற சிறுமி ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுமி உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

images/content-image/2023/12/1703232748.jpg

வவுனியா - நாகர் இலுப்பைக்குளத்தினை சேர்ந்த ஜன்சிகா வயது 17 என்ற சிறுமியே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!